நிஜத்திலும் நடிக்கும் நடிகர்கள்
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத,அளவுக்கு அதிகமான ஹீரோயிசம் எனும் புலித்தோலை ஏந்தியுள்ள நடிகர்கள் பகுதிநேரமாக தம் திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்து ஏமாற்றியது போக முழுநேரமாக நிஜவாழ்க்கையில் ஏமாற்றிக்கொண்டுவருகிறார்கள்.அவர்களது சொந்தவாழ்க்கை........அந்த கேவலமான வரலாறு தொடர்பானது அல்ல இந்த பதிவு.மாறாக தம் சுயவிளம்பரத்திற்காக மேற்குறிப்பிட்ட கூட்டத்தினர் பயன்படுத்தும் விடயம் பற்றியது.
இலங்கையில் தமிழர்கள் மீது இனஅழிப்பு யுத்தம் இடம்பெற்றபோது,பல நாடுகளும்,மனித உரிமை அமைப்புகளும் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நடித்துகொண்டிருந்தபோது,தம் பங்கிற்கு இலங்கைத்தமிழர் விவகாரத்தை கையில் எடுத்து,காலம்காலமாக நடத்திவரும் நாடகத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை மேடையேற்றியது தென்னிந்திய நடிகர் சங்கம்.இலங்கை தமிழர்களுக்கு நிம்மதி இல்லாத பூமிக்கு படப்பிடிப்புக்காகவோ,வேறு காரணங்களுக்காகவோ யாரும் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு செல்பவர்களின் படங்களுக்கு தடைவிதிப்பது என்றும் அறிவித்து தாமும் தமிழுணர்வாளர்கள் என்று காட்டிக்கொண்டார்கள்.ஆனால் அவர்களது வேஷம் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவரை மட்டுமே தாக்குப்பிடித்தது.அதுவும் இதுவரை இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் தென்னிந்திய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிராத நிலையில் அதற்கு பழிவாங்கும் நோக்கில் இவ்விழாவை புறக்கணித்துவிட்டு இலங்கை தமிழர்களுக்காக என்று வீரவசனம் வேறு பேசிக்கொண்டார்கள்.அதிலும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி நாம் தமிழர் அமைப்பு போராட்டம் பண்ணத்தொடங்கிய பின்புதான் நம் ஹீரோக்களுக்கு அறிவுக்கண் திறந்தது.அதுவரை யாருடைய முந்தானைக்குள் ஒளிந்திருந்தார்களோ????
இவ்வாறு அரங்கேற்றிய நாடகத்திற்கு என்ன நடந்தது?என்ன நடக்கப்போகிறது என்று உங்களில் யாருக்காவது புரிகிறதா?.புரிந்திருந்தால் நீங்கள் மனிதன்,இல்லாவிட்டால்தான் தமிழன்.காரணம் உலகிலேயே மிகவும் ஏமாளியான இனம் நம்மினம்தான்.அது ஏன் என்பது பற்றி வேறு ஒரு பதிவில் ஆராயலாம்.
எங்கிருந்தோ வந்த அசின் இலங்கை வந்து போனது விடயமல்ல,ஆனால் அவள் இங்கு அடித்த கூத்துக்களும் கடைசியில் இலங்கை தமிழர்களுக்காக செய்ததாக பட்டியலிட்ட சாதனைகளும் நீங்கள் அறியாததல்ல.அவள் இனி தமிழ் படங்களில் நடிக்கமுடியாது என்று வந்த அறிக்கைகள்,அவளது படங்கள் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என்ற வீறாப்புகள்,தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எல்லாம் எங்கே?கடைசியில் விஜயுடன் காவலன் படத்தில் நடிக்கிறார் அசின்.படப்பிடிப்பு நடக்கிறது.எதிர்ப்பு காட்டிய தமிழர்கள் கைது.
நடிகர் விஜய் அசினுடன் காவலன் படத்தில் நடிப்பதால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்புகளுக்காக,அவர்களை ஈடு செய்வதற்காக சீமானின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.அதாவது நம் தலையில் மிளகாய் அரைக்கப்போகிறாராம்.தமிழகத்தில் அடுத்த முதல்வராக வர இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?
எல்லோரும் சும்மா சிவனே என்று இருக்க நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.இலங்கை செல்வது அவரவர் தனிப்பட்ட விடயமாம்.இதை முன்பே யோசிச்சிருக்கலாம்.நாங்களா கேட்டோம் உங்களை அறிக்கை விடச்சொல்லி?சரத்குமாருக்கும் ராதிகாவிற்கும் இலங்கையில் உள்ள வியாபார தொடர்புகள் தமிழன் என்ற உணர்வைவிட பெரியது.
சூர்யா நடித்த ரத்தசரித்திரம் விரைவில் திரைக்கு வருகிறது.விவேக் ஓபராய் இலங்கை விழாவில் கலந்து கொண்டதால் அவரது படத்துக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தான் வாங்கி வைத்திருந்த விநியோக உரிமையை தயாநிதி அழகிரிக்கு விற்று லாபம் பார்த்துள்ளார் சூர்யா.இனியும் இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.காரணம் படத்தை வெளியிடுபவர்கள்.எவனுமே வாய் திறக்கபோவதில்லை.
மேற்கூறியவர்கள் மட்டுமன்றி கருப்பு ஆடுகள் பல உள்ளன.ஆனால் இப்போதைக்கு இவை போதும் என நினைக்கிறேன்.இப்படியாக இவர்கள் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல.ஆனால் இலங்கை தமிழர்களை வைத்து இப்படி பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு ........................வைத்து பிழைப்பு நடத்தலாம்(பெட்டிக்கடை,புடவைக்கடை எது வேண்டுமானாலும் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம்).
இந்தியாவிலுள்ள எந்த ஒரு தரப்பிடமிருந்தும் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் கிடைக்காது என்பதை சகலரும் உணர்ந்துகொண்டால் சரி.அதை குறிப்பிட்ட வீதமாவது வெளிப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.
4 comments:
useless note..........
ithe keddu evan thiruntha poraan
pirayosanamaa oru pathivu podunka
Well
The actors are there for business, they make their money and pi** off the audience. I see no reason as to why the people (well I do watch movies) give importance to these di** heads.
LEROCIYAN
Why do you watch movies then ? Stiop doing it from today atleast. Will You ?
Its your ignorance and idiocy that feed these di** heads-the Tamil actors or actors acting in Tamil films.
சகோதரா எல்லாம் வேச தாரிகள் இதையும் ஒரு தடவை பாருங்கள்
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
Post a Comment