" மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்"
இதைத்தானே போன ஆட்சி முழுவதும் பார்த்து வெறுத்துப்போனோம். திரும்பவுமா?
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் இலங்கை வந்தபோது சொல்லி அனுப்பியது இதைத்தானோ?
இலங்கை மீது பொருளாதார தடை கேட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தது உண்மையான இனப்பற்றிலா? இல்லையா? என்று நிருபீக்கவேண்டிய தருணத்தில் இப்பிடி கடிதம் மட்டும் எழுதி தமிழர்களை மீண்டுமொருமுறை முட்டாளாக்க வேண்டாம்.
தி.மு.கவும் காங்கிரசும், இலங்கைதமிழர்களையும் தமிழகமீனவர்களையும் பலிக்கடாவாக்கி அரசியல் பண்ணியதைப்போல் மீண்டுமொரு கூட்டணி உருவாகாமலும், அஸ்தமித்த காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் எழுந்துவர இடமளிக்காமலும் இருந்தாலாவது போதும்.