Tuesday, June 21, 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்.....................

தமிழ்நாடு ஏற்படுத்திய தேர்தல் புரட்சிக்குப்பின் ஜெ அம்மையாரின் அதிரடியில் மூழ்கி இருந்த எனக்கு நேற்றைய செய்தி மீண்டும் கொஞ்சம் பழைய ஆட்சியை அசைபோடச்சொன்னது. தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை இராணுவத்தால் கைது ,படகுகளும் பறிமுதல். செய்தியை படித்ததும் தமிழகத்தின் விடிவெள்ளி இதற்கு காட்டப்போகும் அதிரடி என்னவென்று பார்க்க மனம் ஆர்வமானதும், அதிரடியை பார்த்து புஸ்வானமானதும் உண்மை. இருக்காதா பின்னே?

"  மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்"

இதைத்தானே போன ஆட்சி முழுவதும் பார்த்து வெறுத்துப்போனோம். திரும்பவுமா?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் இலங்கை வந்தபோது சொல்லி அனுப்பியது இதைத்தானோ? 

இலங்கை மீது பொருளாதார தடை கேட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தது உண்மையான இனப்பற்றிலா? இல்லையா? என்று நிருபீக்கவேண்டிய தருணத்தில் இப்பிடி கடிதம் மட்டும் எழுதி தமிழர்களை மீண்டுமொருமுறை முட்டாளாக்க வேண்டாம்.

தி.மு.கவும் காங்கிரசும், இலங்கைதமிழர்களையும் தமிழகமீனவர்களையும் பலிக்கடாவாக்கி அரசியல் பண்ணியதைப்போல் மீண்டுமொரு கூட்டணி உருவாகாமலும், அஸ்தமித்த காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் எழுந்துவர இடமளிக்காமலும் இருந்தாலாவது போதும். 

1 comment:

இளங்கோ said...

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கச் சொல்லி போட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசின் நிலை என்ன?தீர்மானம் போட்டதோடு கடமை முடிந்து விட்டதாக அம்மையார் நினைக்கிறார் போலும்.”முகம்மது பின் துக்ளக்” திரைப்படத்தில் ஒரு வசனம் “தீர்ந்தது மொழிப் பிரச்சினை”அது மாதிரி உள்ளது.

Post a Comment