Tuesday, October 12, 2010

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழர்களிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் வரும் போகும் எவனையும் நன்கு உபசரிப்பார்கள்,ஆனால் கூட இருக்கும் தன இனத்தானை மறந்திடுவார்கள்.கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் என்று பெருமை வேறு.ஏமாளி இனம் என்று சொல்லாமல் என்னவென்பது?நிஜ வாழ்க்கையில் பல உதாரணங்கள் இருந்தாலும் நம்மவர்களுக்கு விளங்கும் விதமாக கூற வேண்டுமென்றால் சினிமா நட்ச்சத்திரங்கள்தான் வேண்டும்.ரஜினி முதல் நயன்தாரா வரை தமிழகம் வந்து தமிழர்களுக்கு தண்ணிகாட்டிவரும் வெளிமாநிலத்தவரின் பட்டியல் மிகப்பெரியது.

தமிழ் சினிமா எனும் பெருங்கடலில் நடிகர்கள் பலரும் தமிழ் இல்லை.
நடிகைகள் சுத்தமாக தமிழ் இல்லை.
பாடகர்கள் தமிழ் இல்லை.
இசை அமைப்பாளர்கள் பலரும் தமிழர்கள் இல்லை.
கோடி கோடியாய் பணம் அள்ளும் தயாரிப்பாளர்களும் தமிழ் இல்லை.
இயக்குனர்கள் சிலரும் தமிழ் இல்லை.
தமிழ் படவசனங்களில் தமிழ் இல்லை.
தமிழ்பாடல்களில் தமிழ் இல்லை.

உலகில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களில் மேற்சொன்ன திறமைகளுக்கு யாருமே இல்லை.ஆனால் எம்மை விட எண்ணிக்கை குறைந்த மாநிலத்தவர் பலர் இன்று நம் கண்முன் சுப்பர் ஸ்டார்களாக,அல்டிமேட் ஸ்டார்களாக உலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.வேறு மாநிலத்தவர் பலரும் தமிழ் படங்களில் பாடகர்களாகவோ,நடிக நடிகர்களாகவோ அறிமுகம் ஆனபின்புதான் அவரவர் சொந்த மாநிலங்களில் வாய்ப்பு பெறுகின்றனர்.

ஏன் இந்த நிலைமை?
குறைந்தது தமிழ் பாடல்களை தமிழ் பாடகர்களை வைத்து பாட வைத்தால்தான் என்ன?   

அண்மையில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ஒரு வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்.திறமை என்பது வேறு.ஆனால் இதேபோல் வேறு மாநிலங்களில் சென்று திறமை இருந்தால் கூட நம்மவர்கள் யாரும் வெற்றி பெற முடியாது என்பதை யாவரும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.கரணம் எல்லோரும் நம்மைப்போல் ஏமாளிகள் இல்லை.

ஆனால் தமிழர்கள் இருக்கோ இல்லையோ அந்த படத்தை தலையில் வைத்து கொண்டாட,டிக்கெட் எடுத்து படம் பார்க்க கோடிக்கணக்கில் ஏமாளிகள் நாம் இருக்கிறோம்.

Monday, October 11, 2010

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள்
சமீப காலமாக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவது பற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இலங்கையிலிருந்து பலரும் வெளிநாடு சென்று கற்பதனால் இலங்கைக்கு அந்நிய செலாவணி விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது.அரசாங்கத்தரப்பு இதனை காரணம் காட்டி தனியார் முதலீட்டினை கல்வியில் ஈடுபடுத்த அனுமதிகளை வழங்கி வருகிறது.இலவச கல்வி முறைமைக்கு பாதிப்பு வராதவரை இது நல்ல விடயம்தான்.ஆனாலும் அரசினதும் சில அமைச்சர்களினதும் நடவடிக்கைகளை பார்க்கும்போது இத்திட்டமானது பொது மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்படுகிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.



குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுவதும் இதன்காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெறுகிறது.இது தனியார் கல்வி தொடர்பிலான மாணவர்களுக்கு சார்பானதாக அமைவதோடு பொதுமக்களை அது தொடர்பில் ஈர்ப்பதாகவும் அமைகிறது.எந்த பெற்றார்தான் தன் பிள்ளை விரைவாக படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்?



மேலும் இலங்கையில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை அரச பக்கம் தாவியுள்ள ஐ.தே.க. உறுப்பினர்களாலேயே ஸ்தாபிக்கப்படுவதானது இலங்கையின் கல்வி அரசின் குறுகிய லாபங்களுக்காக அடகு வைக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்ப்படுத்துகிறது.இந்தியாவை போன்று இலங்கையிலும் அமைச்சர்களினதும் கட்சிகளினதும் நிதி மூலங்களாக கல்வி மாற்றப்படுகிறது.இந்தியாவில் அதிகரித்த தனியார் கல்விப்பல்கலைக்கழகங்களால் கூடுதலான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டபோதும் கல்லூரிகளின் கல்வித்தரம் சரியாக கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்தியா பின்தங்கி நிற்பதற்கு இதுவே காரணம். இதே நிலை வெகு விரைவில் இலங்கையிலும் ஏற்படப்போகிறது என்பது கசப்பான உண்மை.

Friday, October 8, 2010

நிஜத்திலும் நடிக்கும் நடிகர்கள்

நிஜத்திலும் நடிக்கும் நடிகர்கள்


தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத,அளவுக்கு அதிகமான ஹீரோயிசம் எனும் புலித்தோலை ஏந்தியுள்ள நடிகர்கள் பகுதிநேரமாக தம் திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்து ஏமாற்றியது போக முழுநேரமாக நிஜவாழ்க்கையில் ஏமாற்றிக்கொண்டுவருகிறார்கள்.அவர்களது சொந்தவாழ்க்கை........அந்த கேவலமான வரலாறு தொடர்பானது அல்ல இந்த பதிவு.மாறாக தம் சுயவிளம்பரத்திற்காக மேற்குறிப்பிட்ட கூட்டத்தினர் பயன்படுத்தும் விடயம் பற்றியது.



இலங்கையில் தமிழர்கள் மீது இனஅழிப்பு யுத்தம் இடம்பெற்றபோது,பல நாடுகளும்,மனித உரிமை அமைப்புகளும் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நடித்துகொண்டிருந்தபோது,தம் பங்கிற்கு இலங்கைத்தமிழர் விவகாரத்தை கையில் எடுத்து,காலம்காலமாக நடத்திவரும் நாடகத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை மேடையேற்றியது தென்னிந்திய நடிகர் சங்கம்.இலங்கை தமிழர்களுக்கு நிம்மதி இல்லாத பூமிக்கு படப்பிடிப்புக்காகவோ,வேறு காரணங்களுக்காகவோ யாரும் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு செல்பவர்களின் படங்களுக்கு தடைவிதிப்பது என்றும் அறிவித்து தாமும் தமிழுணர்வாளர்கள் என்று காட்டிக்கொண்டார்கள்.ஆனால் அவர்களது வேஷம் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவரை மட்டுமே தாக்குப்பிடித்தது.அதுவும் இதுவரை இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் தென்னிந்திய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிராத நிலையில் அதற்கு பழிவாங்கும் நோக்கில் இவ்விழாவை புறக்கணித்துவிட்டு இலங்கை தமிழர்களுக்காக என்று வீரவசனம் வேறு பேசிக்கொண்டார்கள்.அதிலும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி நாம் தமிழர் அமைப்பு போராட்டம் பண்ணத்தொடங்கிய பின்புதான் நம் ஹீரோக்களுக்கு அறிவுக்கண் திறந்தது.அதுவரை யாருடைய முந்தானைக்குள் ஒளிந்திருந்தார்களோ????



இவ்வாறு அரங்கேற்றிய நாடகத்திற்கு என்ன நடந்தது?என்ன நடக்கப்போகிறது என்று உங்களில் யாருக்காவது புரிகிறதா?.புரிந்திருந்தால் நீங்கள் மனிதன்,இல்லாவிட்டால்தான் தமிழன்.காரணம் உலகிலேயே மிகவும் ஏமாளியான இனம் நம்மினம்தான்.அது ஏன் என்பது பற்றி வேறு ஒரு பதிவில் ஆராயலாம்.



எங்கிருந்தோ வந்த அசின் இலங்கை வந்து போனது விடயமல்ல,ஆனால் அவள் இங்கு அடித்த கூத்துக்களும் கடைசியில் இலங்கை தமிழர்களுக்காக செய்ததாக பட்டியலிட்ட சாதனைகளும் நீங்கள் அறியாததல்ல.அவள் இனி தமிழ் படங்களில் நடிக்கமுடியாது என்று வந்த அறிக்கைகள்,அவளது படங்கள் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என்ற வீறாப்புகள்,தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எல்லாம் எங்கே?கடைசியில் விஜயுடன் காவலன் படத்தில் நடிக்கிறார் அசின்.படப்பிடிப்பு நடக்கிறது.எதிர்ப்பு காட்டிய தமிழர்கள் கைது.



நடிகர் விஜய் அசினுடன் காவலன் படத்தில் நடிப்பதால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்புகளுக்காக,அவர்களை ஈடு செய்வதற்காக சீமானின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.அதாவது நம் தலையில் மிளகாய் அரைக்கப்போகிறாராம்.தமிழகத்தில் அடுத்த முதல்வராக வர இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?



எல்லோரும் சும்மா சிவனே என்று இருக்க நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.இலங்கை செல்வது அவரவர் தனிப்பட்ட விடயமாம்.இதை முன்பே யோசிச்சிருக்கலாம்.நாங்களா கேட்டோம் உங்களை அறிக்கை விடச்சொல்லி?சரத்குமாருக்கும் ராதிகாவிற்கும் இலங்கையில் உள்ள வியாபார தொடர்புகள் தமிழன் என்ற உணர்வைவிட பெரியது.



சூர்யா நடித்த ரத்தசரித்திரம் விரைவில் திரைக்கு வருகிறது.விவேக் ஓபராய் இலங்கை விழாவில் கலந்து கொண்டதால் அவரது படத்துக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தான் வாங்கி வைத்திருந்த விநியோக உரிமையை தயாநிதி அழகிரிக்கு விற்று லாபம் பார்த்துள்ளார் சூர்யா.இனியும் இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.காரணம் படத்தை வெளியிடுபவர்கள்.எவனுமே வாய் திறக்கபோவதில்லை.



மேற்கூறியவர்கள் மட்டுமன்றி கருப்பு ஆடுகள் பல உள்ளன.ஆனால் இப்போதைக்கு இவை போதும் என நினைக்கிறேன்.இப்படியாக இவர்கள் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல.ஆனால் இலங்கை தமிழர்களை வைத்து இப்படி பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு ........................வைத்து பிழைப்பு நடத்தலாம்(பெட்டிக்கடை,புடவைக்கடை எது வேண்டுமானாலும் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம்).



இந்தியாவிலுள்ள எந்த ஒரு தரப்பிடமிருந்தும் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் கிடைக்காது என்பதை சகலரும் உணர்ந்துகொண்டால் சரி.அதை குறிப்பிட்ட வீதமாவது வெளிப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

Friday, October 1, 2010

எந்திரன் எனது பார்வையில்..........

எந்திரன் எனது பார்வையில்..........
ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் பிரமாதம்,எந்திரன் கதை 
பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவில்லை,காரணம் நான் திரை விமர்சகன் அல்ல.மேலும் விமர்சனம் எனும் பெயரில் படத்தின் கதையை எழுதி இனி படம் பார்க்க போகும் எவருடைய ஆர்வத்தையும் குறைக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் என் மனதில் தோன்றும் சில விடயங்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு.
 
முதல்நாள், கொட்டும் மழையிலும் மணிக்கணக்கான காத்திருப்புக்கு பிறகும் படம் பார்க்க அமர்ந்தால் நினைக்கவில்லை இப்பிடியொரு விருந்து காத்திருக்கும் என்று.படத்தின் எழுத்தோட்டம் முதல் உன்னிப்பாக கவனித்த எனக்கு மிகவும் கவலையை கொடுத்த விடயம் என்னவென்றால் எந்திரன் படத்தின் காரண கர்த்தாக்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சுஜாதா இப்படம் பார்க்க இப்போது இல்லை என்பது.காரணம் இப்படம் முழுக்க அவரது கதையின் தழுவல்தான்.ஆனாலும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதல் கொண்டு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமரர் சுஜாதாவிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.இப்படத்தின் எழுத்தோட்டத்திலும் கூட அவருக்கு நன்றியோ,அஞ்சலியோ தெரிவிக்கப்படவில்லை.தனியே தவிக்கவிட்டுப்போன கோபமோ தெரியவில்லை ஷங்கருக்கு. ஆனால் யார் மறந்தாலும் அவரது வசனங்கள் படம் முழுக்க அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.அதிலும் சந்தானம்,கருணாசிடம் ''மனுஷங்களுக்கும் எனக்கும் இவ்வளவுதானா வித்தியாசம்'' என ரோபோ ரஜினி கேட்கும் வசனம் போன்றவை எல்லாம் சுஜாதாவிற்கு மட்டுமே உரிய கலை.படத்தின் வசனம் :சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்றே போடப்படுகிறது.அப்பிடி என்ன சாதித்துவிட்டார் இந்த கார்க்கி?வாரிசு அரசியல்,வாரிசு நடிகர் மாதிரி வாரிசு கவிஞர்.ரொம்பவே ஓவர்.
 
ரஜினிக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உண்டோ அதேபோல் ஷங்கர் படத்திற்கு என்றும் ஒரு கூட்டம் உண்டு.ஷங்கரின் படத்தில் வரும் பாடல் காட்சிகள்,சண்டைக்காட்சிகளை ரசிக்கவென்றே அலையும் கூட்டம் அது.அப்படிப்பட்டவர்களுக்கு எந்திரன் கொஞ்சம் ஏமாற்றம்தான்.பணம் போதவில்லையோ தெரியவில்லை,ரோபோ ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் தெரியும் ஷங்கரின் உழைப்பு பாடல்,சண்டை காட்சிகளில் இல்லை.ஆனால் ஷங்கர் சாதித்துவிட்டார்.
படத்தின் பல இடங்களில் இது ரஜினி படம் என்பதைவிட ஷங்கர் படம் என்பதை திரையில் பார்க்க  முடிந்தது.ரஜினிக்கு அறிமுகப்பாடல் இல்லை,அறிமுகமாகும்போது வரும் வழக்கமான பில்டப்புகள் இல்லை.ஆனால் படம் முழுக்க ரஜினி சாம்ராஜ்ஜியம்தான்.அடுத்த ரஜினி படம் இயக்கபோகும் இயக்குனர்,தயாரிப்பாளர் ஆகியோருக்கு இப்படம் நிச்சயம் வயிற்றில் புளியை கரைத்திருக்கும். காரணம் இதைவிட அருமையாக ரஜினியை எம் கண்முன் நிறுத்த யாராலும் முடியாது.
 
படத்தில் ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும் தமிழ் திரையுலகின் இத்தகைய அரிய முயற்சிக்கு தலைவணங்கலாம்.வாழ்த்துக்கள்.ரஜினி படமாக ரொம்ப பிரமாதம்,ஷங்கரின் பழைய படங்களுடன் ஒப்பிட்டு என்று கூறுவதை நிறுத்தி புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டிருக்கும் இயக்குனருக்கு இப்படத்தின் வெற்றியை காணிக்கையாக்குவோம்.
 
 

Monday, September 27, 2010

தி.மு.க-காங்கிரஸ்....சிறு அலசல்

தி.மு.க-காங்கிரஸ்....சிறு அலசல்


தமிழக சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் கூட்டணி குறித்த எதிர்வுகூறல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்பதாக பரவலாக பேசப்படுகிறது.அனால் தமிழ்நாட்டு அரசியலை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
காரணம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் மாநிலத்தில் காங்கிரசை ஓரம் கட்டக்கூடிய தைரியம் தி.மு.கவிடம் இல்லை.காங்கிரஸ் இன்றி ஆட்சியை பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அல்ல,மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக.காரணம் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மத்தியில்,மாநிலத்தில் என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கையில்,ஆட்சிக்கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயமாக குடும்ப வாரிசுகள் மத்தியில் குழப்பங்களை ஏற்ப்படுத்தும் என்பதை கருணாநிதி நன்கு அறிவார்.ஆகவேதான் காங்கிரசின் கூச்சல்களுக்கு சற்று அடக்கி வாசிக்கிறது தி.மு.க.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இளங்கோவனின் நடவடிக்கைகள் பலருக்கு புரியாவிட்டாலும் அதில் உள்ள காய்நகர்த்தல்கள் மிக முக்கியமானவை.விஜயகாந்தின் தே.மு.தி.கவுடன் அவர் காட்டி வரும் நெருக்கமும்,விடும் அறிக்கைகளும் நிச்சயமாக திட்டமிடப்பட்டதொன்று.தி.மு.க அரசின் இயலாமையை சாதகமாக்கி கூடுதல் தொகுதிகளையோ அல்லது ஆட்சியில் பங்கையோ பெற்றுக்கொள்ள வேண்டி காங்கிரஸ் ஆடும் நாடகமே இது.தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டாலும் அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது காங்கிரசுக்கே தெரியும்.இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும்,அதற்கு தி.மு.கவை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பல முனை காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது.அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அடுத்து வரும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

அ.தி.மு.கவின் மந்தமான அரசியலும்,தேர்தல் நேரங்களில் நடக்கும் பணப்பரிமாற்றங்களும் தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்கின்ற அதேவேளை அதன் கூட்டணிக்கட்சிகளையும் அதன்கூடவே வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பது உண்மை.தி.மு.கவின் பலம் என்னவென்று காங்கிரஸ் மேலிடம் அறியாமலில்லை.

Friday, September 24, 2010

மட்/புனித மிக்கேல் கல்லூரி

மட்/புனித மிக்கேல் கல்லூரி
ஆயிரக்கணக்கான கல்விமான்களை மட்டு மண்ணுக்கு உருவாக்கி தந்த பெருமைக்குரிய கல்லூரி.இயேசு சபை துறவிகளால் ஆரம்பிக்கப்பட்டு பல நல்ல ஆசிரியர்களால் உரமிட்டு வளர்க்கப்பட்ட கல்லூரி.
இதன் இன்றைய நிலை என்ன?
கூடைபந்தாட்டத்திற்கு பெயர் போன பாடசாலை இன்று இரண்டாம் நிலைக்கு தரமிறக்கப்படுள்ளது.
டென்னிஸில் வெற்றி என்பது நினைக்க முடியாது போய்விட்டிருக்கிறது.
தமிழ் மொழி,ஆங்கில மொழி தின போட்டிகளில் சக பாடசாலைகளை விட மோசமான பெறுபேறு.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கூறும்படியாக எதுவுமில்லை.

மாவட்டத்தில் நல்ல போட்டித்தன்மையான ஆண்கள் பாடசாலை இன்மையால் திறமையான மாணவர்கள் அனைவரும் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் சரியான விதத்தில் பட்டை தீட்டப்படுவதில்லை.சில ஆசிரியர்களை வகுப்பைவிட விட கூடுதலாக ஓய்வு அறையில்தான் அதிகம் காணமுடிகிறது.சில ஆசிரியர்களை பாடசாலை நேரத்திலும் வீதிகளில்,அரச அலுவலகங்களில் காண முடிகிறது.வகுப்பை விட்டு வெளியில் திரியும் மாணவர்களை கட்டுப்படுத்தவென்று கூறிக்கொண்டு வெட்டியாக திரியும் ஆசிரியர்கள் சிலர்.அனைத்து வகுப்புகளிலும் ஒழுங்காக பாடம் நடக்கும் என்றால் மாணவர்கள் எப்பிடி வெளியில் திரிகிறார்கள்.இருக்கும் பிரச்சனைகளுக்கு மேலாக அதிபருக்கு ஆதரவாக,எதிராக என்று குழப்பங்கள் வேறு.இந்நிலையில் எப்பிடி முன்னேறுவது?

காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பாடசாலைகளின் கற்பித்தல் திறனுக்கும்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்கும் முன் நீங்கள் எல்லாம் ....................கேவலம்.செய்யும் தொழிலை ஒழுங்காக செய்யுங்கள்,அது யாராக இருந்தாலும் சரி.ஆசிரியரோ, மாணவரோ, பழைய மாணவரோ அல்லது கல்வித்திணைக்களம் என்று ஒன்று உண்டாமே ,அதன் அதிகாரிகளோ யாராயினும் தயவுசெய்து கடமை தவறாதீர்கள்.சாதிக்க நிறைய காத்திருக்கிறது.தயாராகுங்கள் நம்மை சுற்றி போட்டி அதிகமாகிறது.

Wednesday, September 22, 2010

பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட்

சமீப காலமாக சூதாட்ட புகாரில் சிக்கி சீரழிந்து விட்டிருக்கிறது பாகிஸ்தானின் கிரிக்கெட்.
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் spot fixing என ஆரம்பித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள்.குற்றச்சாட்டுக்களும் அதன் பின்னரான பாக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும்போது வெறுமனே வீரர்களுக்கு மட்டுமன்றி அதிகாரிகளுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உண்டென சந்தேகிக்க இடமுண்டு.பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, வீரர்களிடம் விசாரணை நடத்தியதா தெரியவில்லை.ICC மட்டுமே வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது.இத்தனை மோசமாக விளையாடி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆஸ்திரேலியா தொடரின்போது கம்ரன் அக்மலின் மிக மோசமான விக்கெட் காப்பு தொடர்பாக அவரை அணியிலிருந்து இடைநிறுத்த நினைத்தும் முடியாமல் போனது நினைவிருக்கலாம்.அந்த சந்தர்ப்பத்தில் அக்மல் தன்னை அணியிலிருந்து நீக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி வந்தமை கவனிக்க வேண்டியது.அவ்வாறு கூறும் தைரியம் எங்கிருந்து வந்தது?

மேலும் இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ICC தலைவராக பொறுப்பேற்றது முதற்க்கொண்டே சூதாட்ட புகார்கள் விஸ்வரூபமேடுத்திருக்கிறது.இது இந்தியர்களின் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதியாகவும் இருக்கலாம்.



என்னதான் இருந்தாலும் பாக் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

சிறையில் ஒரு சிங்கம்

சிறையில் ஒரு சிங்கம்
 
நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குனருமான மதிப்புக்குரிய அண்ணன் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதாகி இன்னமும் சிறையில்.
எதிர்வரபோகும் சட்ட மன்ற தேர்தல் குறித்த சூடான அறிக்கைகள்,விவாதங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் ஒரு உண்மை தமிழனின் விடுதலை குறித்த விடயம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

ஈனப்பிறவி கருணாநிதியின் கேவலமான அரசியல் வரலாற்றில் மற்றுமொரு கரை படிந்த அத்தியாயம்.

நான் உட்பட அனைத்து தமிழர்களும் வெட்கப்பட வேண்டிய விடயம்.

கேவலம் விபச்சார நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் திரை உலகம்,அதிலும் குறிப்பாக இயக்குனர் சங்கம் தமது சங்க உறுப்பினர் தொடர்பில் வாய் மூடி மௌனிகளாகி நிற்பது மிகப்பெரிய துரோகம்.

இந்நிலையில் சீமானின் விடுதலைக்காக குரல் கொடுக்காதிருக்கும் அனைவரையும் கண்டிக்கிறேன்

Wednesday, September 15, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

சென்னை அபாரம்
சாம்பியன்ஸ் லீக் t20 இன் மற்றொரு போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் இலங்கையின் வயம்ப லேவன்ஸ் அணியும் மோதின.
சென்னை 200 ஓட்டங்கள் ,முரளி விஜய் 68 ,ரைனா 87 (44 ),ஆஹா கண்கொள்ளாக் காட்சி.
என் ஆதரவுக்கு உரிய அணியும் எனக்கு பிடிக்காத அணியும் மோதும்போது இப்பிடி ஒரு சந்தோஷ பரவசம் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல.
பதிலுக்கு களம் இறங்கிய வயம்ப 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது இரட்டிப்பு சந்தோஷம்.அஷ்வின் 4 /18 .
எவ்வளவு நாளாச்சு இப்பிடி நான் சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிச்சு!!!!!!!!!!!!!!.
ஹெய்டன் ய நீக்கிவிட்டு ஜஸ்டின் கேம்ப் அல்லது மைக் ஹுசே ய அணியில் இணைத்தால் நல்லது.
சொதப்புவதர்க்கும்  ஒரு அளவு வேண்டாம் ?????????

Monday, September 13, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு



தமிழ் மக்களின் நிலை அறிந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள்.தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி வேண்டும் என்பதும் தமிழர்களின் வாக்குகள் சிதரடிக்கப்படகூடாது என்பதும் சேர்ந்து பெரும்பாலான தமிழ் வாக்குகளை கூட்டமைப்புக்கு பெற்று கொடுத்திருக்கிறது.

அப்படி இருக்கையில் இன்னும் இலங்கைக்கு,பேரினவாதிகளுக்கு ஒத்து வராத, சாத்தியமே இல்லாத சமஷ்டி,அதிகார பரவலாக்கம்,சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேசி காலத்தை வீணடிக்கும் அரசியல் எதுக்கு?????????

18 ம் அரசியல் திருத்தத்தை தடுக்க முடியாது என்கிறபோதும் ,கூட்டமைப்பின் ஆதரவு இன்றியே பெரும்பான்மை கிடைக்கும் என்கிறபோதும் சாதுரியமாக யோசிக்காத அரசியல் எதற்கு ??????????

மீள்குடியேற்றபடாமல் அல்லாடும் மக்களையோ,எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்படிருக்கும் எம் சகோதர சகோதரிகளையோ விடுவிக்கும் விடயத்தை மாத்திரமாவது முன்னிறுத்தி அரசுக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம்.

விலை போகாத அரசியல்,தன்மான தமிழர்,காட்டிகொடுக்காத அரசியல் என்ற வெட்டி பேச்சு புலம் பெயர் தமிழர்களை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.ஆனால் தொழில் இன்றி,உணவின்றி, முகவரி இன்றி தவிக்கும் நம் உறவுகளை நேசிக்கும் எந்தவொரு தமிழனையும் அது திருப்திப்படுத்தாது.

குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இருக்கும் அரசியல் சாணக்கியத்தில் ஒரு துளி ஏனும் நம் தலைவர்களிடம் இல்லை எனும்போது மனம் ரொம்பவும் வலிக்கிறது.காரணம் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் லட்ச்சக்கனக்கானவர்களில் நானும் ஒருவன்.

Sunday, September 12, 2010

அஜித் -விஜய்
தமிழ் சினிமாவின் நட்சத்திர போட்டியாளர்கள். எனக்கு இருவரையும் பிடிக்காது என்பது என்னவோ உண்மைதான்(காரணம் நான் விக்ரம் ரசிகன்), ஆனால் நல்ல படங்கள் என்றால் எதையும் ரசிப்பவன்.
மேல் சொன்ன நடிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. facebook ,முதலான அநேக தளங்களில் விஜயை தாக்கி,கேவலபடுத்தி எழுதப்படும் அளவுக்கு அஜித் பற்றி இல்லை (கொஞ்சம் குறைவு).ஏன் இந்த வித்தியாசம். பாரபட்ஷம்.அப்போதுதான் சில விடயங்களை யோசித்து பார்த்தேன்.
கோர்ட் சூர்ட் போட்டால் ஒருவருக்கு அழகு,மற்றவருக்கு???????
போலீஸ் கெட்டப் ஒருவருக்கு செம கச்சிதம்(தொப்பை),மற்றவருக்கு??????
கெட்டப் மாற்றியும் சில ஹிட் படங்கள்,மற்றவர் மாற்றாமலேயே ஹிட் படங்கள் சிலதுதான்.
ஒருவர் பேசும் தமிழ் சிரிப்பு,மற்றவர் பேசுவதே சிரிப்பு

ஆனால் ஒன்றில் மட்டும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை,
 சளைக்காமல்  சொதப்பல் படங்களாக தந்து கொண்டிருப்பதுதான் .

இன்னும் எவளவு காலம்தான் ஏமாற்றுவீர்????????????????????????

Saturday, September 11, 2010

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கிண்ண t20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் 9 ம் திகதி ஆரம்பித்துவிட்டது. என்னதான் 8 அணிகள் மோதினாலும் நம் கவனம் அதிகம் ipl அணிகள் மீதுதான்.அதிக நட்சத்திர வீரர்களும்,வெறித்தனமான இந்திய ரசிகர்களும் தான் ipl போட்டி மட்டுமல்ல இத் தொடரயும் பிரபல்யபடுத்துகிறார்கள்.
முதல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் தோல்வி ,கடந்த முறை  ipl அணிகள் இத்தொடரில் சொதப்பியதை நினைவுபடுத்தியது. ipl இறுதிப்போட்டியை தொடர்ந்து இப்போட்டியிலும் பொல்லார்ட் மிகவும் தாமதமாகவே களமிறக்கப்பட்டார். ஒரு தோல்வியில் இருந்தாவது பாடம் கற்று கொண்டிருக்க கூடாதா?
சச்சின் இன் விளையாட்டு அபாரம்.இளம் வீரர்கள் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
ஹர்பஜன் ,சாகிர் கான் ஆகியோரின் பம்மாத்துகள் சிறப்பாக இருந்தது.
மலிங்க மட்டும் பொறுப்பாக பந்து வீசினார் .
ஒட்டுமொத்தத்தில் மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகாவின் பதக்கங்கள்,தர நிலைகள் பறிப்பு

அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்களே அது இதுதான். என்னதான் பொன்சேகா தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டாலும் ,பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் சாபம் ஒன்றும் சும்மாவிடபோவதில்லை.

மனதின் ஆழத்தில் இருந்து...................

இனிய தமிழ் உறவுகளே,
என் மனதில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்ய இந்த தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் கருத்துகளை, நல்ல விமர்சனங்களை தந்து ஊக்கபடுத்தூவீர் என நம்புகிறேன்.

என்றும் அன்புடன்,
லெரோ