Friday, October 1, 2010

எந்திரன் எனது பார்வையில்..........

எந்திரன் எனது பார்வையில்..........
ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் பிரமாதம்,எந்திரன் கதை 
பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவில்லை,காரணம் நான் திரை விமர்சகன் அல்ல.மேலும் விமர்சனம் எனும் பெயரில் படத்தின் கதையை எழுதி இனி படம் பார்க்க போகும் எவருடைய ஆர்வத்தையும் குறைக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் என் மனதில் தோன்றும் சில விடயங்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு.
 
முதல்நாள், கொட்டும் மழையிலும் மணிக்கணக்கான காத்திருப்புக்கு பிறகும் படம் பார்க்க அமர்ந்தால் நினைக்கவில்லை இப்பிடியொரு விருந்து காத்திருக்கும் என்று.படத்தின் எழுத்தோட்டம் முதல் உன்னிப்பாக கவனித்த எனக்கு மிகவும் கவலையை கொடுத்த விடயம் என்னவென்றால் எந்திரன் படத்தின் காரண கர்த்தாக்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சுஜாதா இப்படம் பார்க்க இப்போது இல்லை என்பது.காரணம் இப்படம் முழுக்க அவரது கதையின் தழுவல்தான்.ஆனாலும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதல் கொண்டு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமரர் சுஜாதாவிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.இப்படத்தின் எழுத்தோட்டத்திலும் கூட அவருக்கு நன்றியோ,அஞ்சலியோ தெரிவிக்கப்படவில்லை.தனியே தவிக்கவிட்டுப்போன கோபமோ தெரியவில்லை ஷங்கருக்கு. ஆனால் யார் மறந்தாலும் அவரது வசனங்கள் படம் முழுக்க அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.அதிலும் சந்தானம்,கருணாசிடம் ''மனுஷங்களுக்கும் எனக்கும் இவ்வளவுதானா வித்தியாசம்'' என ரோபோ ரஜினி கேட்கும் வசனம் போன்றவை எல்லாம் சுஜாதாவிற்கு மட்டுமே உரிய கலை.படத்தின் வசனம் :சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்றே போடப்படுகிறது.அப்பிடி என்ன சாதித்துவிட்டார் இந்த கார்க்கி?வாரிசு அரசியல்,வாரிசு நடிகர் மாதிரி வாரிசு கவிஞர்.ரொம்பவே ஓவர்.
 
ரஜினிக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உண்டோ அதேபோல் ஷங்கர் படத்திற்கு என்றும் ஒரு கூட்டம் உண்டு.ஷங்கரின் படத்தில் வரும் பாடல் காட்சிகள்,சண்டைக்காட்சிகளை ரசிக்கவென்றே அலையும் கூட்டம் அது.அப்படிப்பட்டவர்களுக்கு எந்திரன் கொஞ்சம் ஏமாற்றம்தான்.பணம் போதவில்லையோ தெரியவில்லை,ரோபோ ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் தெரியும் ஷங்கரின் உழைப்பு பாடல்,சண்டை காட்சிகளில் இல்லை.ஆனால் ஷங்கர் சாதித்துவிட்டார்.
படத்தின் பல இடங்களில் இது ரஜினி படம் என்பதைவிட ஷங்கர் படம் என்பதை திரையில் பார்க்க  முடிந்தது.ரஜினிக்கு அறிமுகப்பாடல் இல்லை,அறிமுகமாகும்போது வரும் வழக்கமான பில்டப்புகள் இல்லை.ஆனால் படம் முழுக்க ரஜினி சாம்ராஜ்ஜியம்தான்.அடுத்த ரஜினி படம் இயக்கபோகும் இயக்குனர்,தயாரிப்பாளர் ஆகியோருக்கு இப்படம் நிச்சயம் வயிற்றில் புளியை கரைத்திருக்கும். காரணம் இதைவிட அருமையாக ரஜினியை எம் கண்முன் நிறுத்த யாராலும் முடியாது.
 
படத்தில் ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும் தமிழ் திரையுலகின் இத்தகைய அரிய முயற்சிக்கு தலைவணங்கலாம்.வாழ்த்துக்கள்.ரஜினி படமாக ரொம்ப பிரமாதம்,ஷங்கரின் பழைய படங்களுடன் ஒப்பிட்டு என்று கூறுவதை நிறுத்தி புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டிருக்கும் இயக்குனருக்கு இப்படத்தின் வெற்றியை காணிக்கையாக்குவோம்.
 
 

4 comments:

Anonymous said...

அறிமுகமாகும்போது வரும் வழக்கமான பில்டப்புகள் இல்லை
தலைவணங்கலாம்#
நல்ல விஷயம் ...............

Prashanth said...

Endhiran is excitement ,,,,,,entertainment

Anonymous said...

thalaivarukkuriya masala illathathu miga perum kurai.pira nadigarkal seium pothuthaan athu பில்டப் not for Rajnikanth-the super star

Gajen Dissanayake said...

உங்களது பதிவை பார்த்த பின் நானும் "மதன் கார்க்கி" யைப் பற்றி இவர் என்ன பெரிசா செய்துவிட்டார்? என்று தான் நினைத்தேன்.ஆனால் "Making of Enthiran" தொகுப்பில் ஷங்கர் சொன்னார்.."சுஜாதா தவறிய பின்பு அவர் தொடங்கிய பணியை முடிப்பதற்கு ஒருவரை தேடுவதில் கஷ்டப்பட்ட ஷங்கர்...ஓர் எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்பதை கார்க்கி மிகச் சரியாகவே காட்டியுள்ளார்...Robotics படிக்கும் ஒரு மாணவர் என்ற முறையில் அந்த technical words ஐ மிகச்சரியாக கோர்த்துள்ளார்" என்று...என்ன இருந்தாலும் சுஜாதாவுக்கு நிகராக முடியாது என்பது உண்மை தான்..! ஆனால் "இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ" பாடலில் தமிழில் வரும் சரணம் ஒன்றில்..(மற்றைய சரணம் English rap words ஆல் நிரப்பப் பட்டுள்ளது) அவரின் வரிகளில் நான் மயங்கியது உண்மை..! அந்த வரிகளை நீங்களும் கேளுங்கள்...

கூகுள்-கள் காணாத தேடல்கள் என்னோடு....
எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா..?
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..?
உயிரியல் மொழிகளில் "எந்திரன்" தானடி...உளவியல் மொழிகளில் "இந்திரன்" நானடி...
சாதல் இல்லா சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே...! தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே...மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன் ஷட்டவுன்- நீ செய்யாமல்
இரவினில் நான் துடித்தேன் சென்சார் எல்லாம் தேய தேய நாளும் உன்னைப் படித்தேன்...


ரசிக்கும்படியாக இருக்குதோ...? இல்லையோ..?" வாரிசு கவிஞர்" என்று பார்க்க வேண்டாம்...வாரிசுகள் எல்லோரும் சாதிப்பதும் இல்லை...சாதிப்பவர்கள் எல்லோரும் வாரிசுகளும் இல்லை..!

Post a Comment