Monday, September 27, 2010

தி.மு.க-காங்கிரஸ்....சிறு அலசல்

தி.மு.க-காங்கிரஸ்....சிறு அலசல்


தமிழக சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் கூட்டணி குறித்த எதிர்வுகூறல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்பதாக பரவலாக பேசப்படுகிறது.அனால் தமிழ்நாட்டு அரசியலை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
காரணம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் மாநிலத்தில் காங்கிரசை ஓரம் கட்டக்கூடிய தைரியம் தி.மு.கவிடம் இல்லை.காங்கிரஸ் இன்றி ஆட்சியை பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அல்ல,மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக.காரணம் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மத்தியில்,மாநிலத்தில் என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கையில்,ஆட்சிக்கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயமாக குடும்ப வாரிசுகள் மத்தியில் குழப்பங்களை ஏற்ப்படுத்தும் என்பதை கருணாநிதி நன்கு அறிவார்.ஆகவேதான் காங்கிரசின் கூச்சல்களுக்கு சற்று அடக்கி வாசிக்கிறது தி.மு.க.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இளங்கோவனின் நடவடிக்கைகள் பலருக்கு புரியாவிட்டாலும் அதில் உள்ள காய்நகர்த்தல்கள் மிக முக்கியமானவை.விஜயகாந்தின் தே.மு.தி.கவுடன் அவர் காட்டி வரும் நெருக்கமும்,விடும் அறிக்கைகளும் நிச்சயமாக திட்டமிடப்பட்டதொன்று.தி.மு.க அரசின் இயலாமையை சாதகமாக்கி கூடுதல் தொகுதிகளையோ அல்லது ஆட்சியில் பங்கையோ பெற்றுக்கொள்ள வேண்டி காங்கிரஸ் ஆடும் நாடகமே இது.தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டாலும் அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது காங்கிரசுக்கே தெரியும்.இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும்,அதற்கு தி.மு.கவை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பல முனை காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது.அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அடுத்து வரும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

அ.தி.மு.கவின் மந்தமான அரசியலும்,தேர்தல் நேரங்களில் நடக்கும் பணப்பரிமாற்றங்களும் தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்கின்ற அதேவேளை அதன் கூட்டணிக்கட்சிகளையும் அதன்கூடவே வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பது உண்மை.தி.மு.கவின் பலம் என்னவென்று காங்கிரஸ் மேலிடம் அறியாமலில்லை.

2 comments:

Anonymous said...

காங்கிரசு தனியாக நின்றால் டெபாசிட் கூடக் கிடைக்காது.இதிலே இளங்கோவனின் சொறிநாய் சீற்றம் கட்டாயம் பல காங்கிரசுக்காரர்களைத் தோற்கடிக்கப் போகின்றது.தங்கள் தலையிலே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் தி மு க வுக்குக் கொடுக்கும் நெருக்கடி காங்கிரசின் கல்லறையாகத் தமிழ்நாட்டில் கட்டப்படத்தான் உதவும்.எந்தத் தி மு க காரன் இளங்கோவனுக்கோ,அந்த கிறுக்கின் ஆதரவாளருக்கோ வாக்கிடுவான் ?

Dr Lavapirathan said...

அது எல்லாமே வியாபாரம் ...இத பற்றி கதைகிறது நமக்கு அவமானம் ........

Post a Comment