Monday, September 13, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு



தமிழ் மக்களின் நிலை அறிந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள்.தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி வேண்டும் என்பதும் தமிழர்களின் வாக்குகள் சிதரடிக்கப்படகூடாது என்பதும் சேர்ந்து பெரும்பாலான தமிழ் வாக்குகளை கூட்டமைப்புக்கு பெற்று கொடுத்திருக்கிறது.

அப்படி இருக்கையில் இன்னும் இலங்கைக்கு,பேரினவாதிகளுக்கு ஒத்து வராத, சாத்தியமே இல்லாத சமஷ்டி,அதிகார பரவலாக்கம்,சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேசி காலத்தை வீணடிக்கும் அரசியல் எதுக்கு?????????

18 ம் அரசியல் திருத்தத்தை தடுக்க முடியாது என்கிறபோதும் ,கூட்டமைப்பின் ஆதரவு இன்றியே பெரும்பான்மை கிடைக்கும் என்கிறபோதும் சாதுரியமாக யோசிக்காத அரசியல் எதற்கு ??????????

மீள்குடியேற்றபடாமல் அல்லாடும் மக்களையோ,எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்படிருக்கும் எம் சகோதர சகோதரிகளையோ விடுவிக்கும் விடயத்தை மாத்திரமாவது முன்னிறுத்தி அரசுக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம்.

விலை போகாத அரசியல்,தன்மான தமிழர்,காட்டிகொடுக்காத அரசியல் என்ற வெட்டி பேச்சு புலம் பெயர் தமிழர்களை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.ஆனால் தொழில் இன்றி,உணவின்றி, முகவரி இன்றி தவிக்கும் நம் உறவுகளை நேசிக்கும் எந்தவொரு தமிழனையும் அது திருப்திப்படுத்தாது.

குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இருக்கும் அரசியல் சாணக்கியத்தில் ஒரு துளி ஏனும் நம் தலைவர்களிடம் இல்லை எனும்போது மனம் ரொம்பவும் வலிக்கிறது.காரணம் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் லட்ச்சக்கனக்கானவர்களில் நானும் ஒருவன்.

3 comments:

Dr Lavapirathan said...

இது குற்றம் காணும் நோக்கிலேயே எழுதப்பட்ட நகைச்சுவை பதிவு .......

Anonymous said...

மனசாட்சிபடி சொல்லுங்கள் பதிவாளர் அவர்களே நீங்கள் tna ஆதரவு .தெரிவித்திருந்தால் பொங்கி எழுந்திருப்பீர்கள் அல்லவா?

LEROCIYAN said...

நிச்சயமாக இல்லை,சிறுபான்பை கட்சிகள் எனும்போது அரசியலில் சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை.

Post a Comment