பாகிஸ்தான் கிரிக்கெட்
சமீப காலமாக சூதாட்ட புகாரில் சிக்கி சீரழிந்து விட்டிருக்கிறது பாகிஸ்தானின் கிரிக்கெட்.
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் spot fixing என ஆரம்பித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள்.குற்றச்சாட்டுக்களும் அதன் பின்னரான பாக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும்போது வெறுமனே வீரர்களுக்கு மட்டுமன்றி அதிகாரிகளுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உண்டென சந்தேகிக்க இடமுண்டு.பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, வீரர்களிடம் விசாரணை நடத்தியதா தெரியவில்லை.ICC மட்டுமே வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது.இத்தனை மோசமாக விளையாடி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆஸ்திரேலியா தொடரின்போது கம்ரன் அக்மலின் மிக மோசமான விக்கெட் காப்பு தொடர்பாக அவரை அணியிலிருந்து இடைநிறுத்த நினைத்தும் முடியாமல் போனது நினைவிருக்கலாம்.அந்த சந்தர்ப்பத்தில் அக்மல் தன்னை அணியிலிருந்து நீக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி வந்தமை கவனிக்க வேண்டியது.அவ்வாறு கூறும் தைரியம் எங்கிருந்து வந்தது?
மேலும் இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ICC தலைவராக பொறுப்பேற்றது முதற்க்கொண்டே சூதாட்ட புகார்கள் விஸ்வரூபமேடுத்திருக்கிறது.இது இந்தியர்களின் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதியாகவும் இருக்கலாம்.
என்னதான் இருந்தாலும் பாக் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
3 comments:
நடக்கிறதா பார்த்தா இது தனியே வீரர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மாதிரி தெரியல்ல ...................
இந்தியாட பங்கு நிச்சயமா உண்டு எண்டுதான் நான் நினைக்கன்...........
(என்னதான் இருந்தாலும் பாக் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.)true ........
தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
Post a Comment