மட்/புனித மிக்கேல் கல்லூரி
ஆயிரக்கணக்கான கல்விமான்களை மட்டு மண்ணுக்கு உருவாக்கி தந்த பெருமைக்குரிய கல்லூரி.இயேசு சபை துறவிகளால் ஆரம்பிக்கப்பட்டு பல நல்ல ஆசிரியர்களால் உரமிட்டு வளர்க்கப்பட்ட கல்லூரி.
இதன் இன்றைய நிலை என்ன?
கூடைபந்தாட்டத்திற்கு பெயர் போன பாடசாலை இன்று இரண்டாம் நிலைக்கு தரமிறக்கப்படுள்ளது.
டென்னிஸில் வெற்றி என்பது நினைக்க முடியாது போய்விட்டிருக்கிறது.
தமிழ் மொழி,ஆங்கில மொழி தின போட்டிகளில் சக பாடசாலைகளை விட மோசமான பெறுபேறு.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கூறும்படியாக எதுவுமில்லை.
மாவட்டத்தில் நல்ல போட்டித்தன்மையான ஆண்கள் பாடசாலை இன்மையால் திறமையான மாணவர்கள் அனைவரும் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் சரியான விதத்தில் பட்டை தீட்டப்படுவதில்லை.சில ஆசிரியர்களை வகுப்பைவிட விட கூடுதலாக ஓய்வு அறையில்தான் அதிகம் காணமுடிகிறது.சில ஆசிரியர்களை பாடசாலை நேரத்திலும் வீதிகளில்,அரச அலுவலகங்களில் காண முடிகிறது.வகுப்பை விட்டு வெளியில் திரியும் மாணவர்களை கட்டுப்படுத்தவென்று கூறிக்கொண்டு வெட்டியாக திரியும் ஆசிரியர்கள் சிலர்.அனைத்து வகுப்புகளிலும் ஒழுங்காக பாடம் நடக்கும் என்றால் மாணவர்கள் எப்பிடி வெளியில் திரிகிறார்கள்.இருக்கும் பிரச்சனைகளுக்கு மேலாக அதிபருக்கு ஆதரவாக,எதிராக என்று குழப்பங்கள் வேறு.இந்நிலையில் எப்பிடி முன்னேறுவது?
காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பாடசாலைகளின் கற்பித்தல் திறனுக்கும்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்கும் முன் நீங்கள் எல்லாம் ....................கேவலம்.செய்யும் தொழிலை ஒழுங்காக செய்யுங்கள்,அது யாராக இருந்தாலும் சரி.ஆசிரியரோ, மாணவரோ, பழைய மாணவரோ அல்லது கல்வித்திணைக்களம் என்று ஒன்று உண்டாமே ,அதன் அதிகாரிகளோ யாராயினும் தயவுசெய்து கடமை தவறாதீர்கள்.சாதிக்க நிறைய காத்திருக்கிறது.தயாராகுங்கள் நம்மை சுற்றி போட்டி அதிகமாகிறது.
9 comments:
உடனடி தீர்வு வேண்டும்
lero nee oru unmayana arasiyal vaathi..vaalga lero valarga tamil
please close this school first..........
ரிதான் உண்மைகள் எப்பவும் கசப்பானவை .............
ஒவ்வொருவரும் தன்ன பற்றி சரியா யோசித்தாலே எல்லாம் சரியா நடக்கும்
சுதா கொஞ்சம் முகதகாட்டுங்க பனைமட்ட காத்திருக்கு....
ippa puthusaa podiyanukal drugs adikkaanukal endum oru katha....
ஒவ்வருவரும் அவங்கட வேலைய ஒழுங்கா செய்தா எல்லாமே சரி ஆகும்
WE can do anything it depends on everyone
Post a Comment